புதுக்கோட்டை, அக்.30: புதுக்கோட்டை தபால் துறையின் சார்பாக ஊழல் தடுப்பு விழிப்புணர்வு நடைப்பயணம் நடைபெற்றது. புதுக்கோட்டை அஞ்சல் கோட்டத்தின் சார்பாக ஊழல் தடுப்பு வாரம் 27முதல் 2ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு நேற்று விழிப்புணர்வு நடைப்பயணம் நடைபெற்றது. புதுக்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் தொடங்கி தெற்கு ராஜ வீதி கீழ ராஜவீதி வடக்கு ராஜவீதி முடிவாக மேற்கு ராஜ வீதியில் மேற்கொள்ளப்பட்டது.
நடைப்பயணத்தின் போது ஊழல் தடுப்பு விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி அஞ்சல் ஊழியர்கள் பயணம் செய்தனர்.இதில் ஏராளமான அஞ்சல் ஊழியர்கள் மற்றும் அஞ்சல் அதிகாரிகள் பங்கு பெற்றனர். இந்த நடை பயணத்தை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் முருகேசன் தொடங்கி வைத்தார்.
