புதுக்கோட்டை, அக். 30: நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவமுகாம் வரும் நவம்பர் 1ம் தேதி நடக்க இருப்பதாக கலெக்டர் தெரிவித்தார். 13-வது நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் புதுக்கோட்டை சுகாதார மாவட்டம், புதுக்கோட்டை வட்டாரத்தில் உள்ள பெருங்கர் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 1.11.2025 சனிக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெற உள்ளது.இம்முகாமில் இரத்த அழுத்த பரிசோதனை மற்றும் அனைத்து பயனாளிகளுக்கும் இம்முகாமில் 17 சிறப்பு மருத்துவ நிபுணர்கள் மருத்துவ சேவைகள் வழங்குகின்றனர்.
இதில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை மருத்துவம், இருதய மருத்துவம், எலும்பியல் மருத்துவம், நரம்பியல், தோல், காது, மூக்கு மற்றும் தொண்டை மருத்துவம், மகப்பேறு மருத்துவம், இயன் முறை மருத்துவம், பல் மருத்துவம், கண் மருத்துவம், மனநல மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், நுரையீரல் மருத்துவம், நீரிழிவு நோய் மருத்துவம், ஸ்கேன், எக்கோ பரிசோதனைகள் மற்றும் மருத்துவ சேவைகள் மட்டுமின்றி, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பதிவு செய்தல் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான அரசு அங்கீகார சான்றிதழ் இம்முகாமிலேயே வழங்கப்பட உள்ளன. இம்முகாமை மக்கள் பயன்படுத்திக் கொள்ளும்படி கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
