இலுப்பூர். ஆக. 30: அன்னவாசல் அருகே பாலத்தின் மீது அமர்ந்திருந்த கூலி தொழிலாளி நிலை தடுமாறி தவறிவிழுந்து இறந்தார். அன்னவாசல் அருகே உள்ள லெக்கனாப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (34). கூலித்தொழிலாளி, இவர், கடந்த ம்25 தேதி லெக்கனாபட்டியில் உள்ள தனது தாத்தா வீட்டின் அருகே உள்ள பாலத்தில் அமர்ந்திருந்தார்.
அப்போது நிலை தடுமாறி பின்புறம் விழுந்தார். இதில் தஞ்வசாவூர்ர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 27 தேதி நள்ளிரவு இறந்தார். விசாரனையில் போதையில் தவறிவிழுந்து இறந்தது தெரியவந்தது. புகாரின்பேரில் அன்னவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.