பொன்னமராவதி, ஆக. 29: பொன்னமராவதி அருகே காரையூர் பகுதிக்கு தனியாக தீயணைப்பு நிலையம் அமைக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொன்னமராவதியில் தீயணைப்பு நிலையம் உள்ளது. பொன்னமராவதி தாலுகாவில் 42கிராம ஊராட்சி 200க்கும் மேற்பட்ட கிராமங்களும் உள்ளன. இதனால் அவசர தேவைகளுக்கு பொன்னமராவதியில் இருந்து 15 கிமீ தூரத்திற்கு மேல் உள்ள காரையூர் பகுதிக்கு செல்வதற்குள் தீ விபத்து ஏற்பட்டு எரிந்து முடிந்து விடகிறது.
எனவே காரையூர் பகுதியில் உள்ள காரையூர், மேலத்தானியம், சடையம்பட்டி, ஒலியமங்ளம், அரசமலை உள்ளிட்ட பகுதி கிராம மக்கள் பயன்பெறும் வகையில் காரையூரில் தீயணைப்பு நிலையம் அமைத்து தீ விபத்துகளை தடுக்க உதவவேண்டும். எனவே காரையூரில் தீயணைப்பு நிலையம் அமைக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.