கறம்பக்குடி, செப். 27: புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பகுதியில் வெயில் வாட்டி வதைத்தது. இதன் காரணமாக பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை திடீரென்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 5 மணி முதல் 5:40 மணி வரை கறம்பக்குடி பகுதி முழுவதும் கறம்பக்குடி நகர் பகுதியில் காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதனால், வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
+
Advertisement