புதுக்கோட்டை,ஆக. 27: புதுக்கோட்டை மவுன்ட் சியோன் இன்ஜினியரிங் கல்லூரி இணையக்கணிப்பியல் மற்றும் தரவியல் அறிவியல் துறை சார்பில் “குவாண்டம்மெஷின்லெர்னிங்” என்ற தலைப்பில் ஒருநாள் கருத்தரங்கம் கல்லூரிஅரங்கத்தில் நடைபெற்றது. இதில் திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகம், கணினியில் துறையின் உதவி பேராசிரியர் டாக்டர் அஷ்விந்த் ஜனார்த்தனன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
கருத்தரங்கத்தின்தொடக்கத்தில், செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவியல் அறிவியல் துறைத்தலைவர் ரமாதேவி வரவேற்றார். பின்னர், முதன்மையர் டாக்டர் எஸ். ராபின்சன் சிறப்பு விருந்தினரை கவுரவித்தார். செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவியல் அறிவியல் துறையின் உதவி பேராசிரியர் கீதாஞ்சலி பேசினார்.
டாக்டர் அஷ்விந்த், குவாண்டம் கணிப்பியல் மற்றும் மெஷின் லெர்னிங் ஆகிய இரண்டின் ஒருங்கிணைப்பை ஆழமாக விளக்கி, செயற்கை நுண்ணறிவின் எதிர்காலத்தை மாற்றும் புதிய கணிப்பியல் வழிமுறைகள் குறித்து மாணவர்களுக்கு தெளிவான பார்வையை வழங்கினார். இதில் 2ம் மற்றும் 3ம் ஆண்டு செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவியல் அறிவியல் துறை மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு, விருந்தினருடன் சிந்தனையூட்டும் கேள்வி-பதில்கள் மூலம் பயனுள்ள தகவல்களை பெற்றனர்.