புதுக்கோட்டை,ஆக. 27: தொன்னங்குடி வழியாக வைத்தூர் செல்லும் சாலை அகலப்படுத்தும் பணிகளை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். புதுக்கோட்டை தாலுகா, புதுக்கோட்டை-கிழக்கு நெடுஞ்சாலைத்துறை உட்கோட்ட கட்டுப்பாட்டில் உள்ள தொன்னங்குடி வழியாக வைத்தூர் செல்லும் 1.20 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலையானது விவசாயிகள் விளை பொருட்களை சந்தைக்கு எடுத்துச்செல்லவும், பள்ளி குழந்தைகள் சிரமமின்றி பள்ளிக்கு சென்றுவரவும், பொதுமக்கள் போக்குவரத்து வசதிக்காகவும் ஒருவழித்தடத்திலிருந்து இடைவழித்தடமாக அகலப்படுத்தும் பணி ரூ.175 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.
நெடுஞ்சாலைத்துறை மூலம் மேற்கொள்ளபட்டு வரும் இப்பணிகளை புதுக்கோட்டை நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டப் பொறியாளர் தமிழழகன், உதவிக் கோட்டப் பொறியாளர்.பரதன், மற்றும் உதவிப் பொறியாளர் பிரவீன்ராஜ் ஆகியோர் பணியை ஆய்வு செய்தனர்.