பொன்னமராவதி,நவ.22: மாநில அளவிலான கராத்தே போட்டியில் பரிசு பெற்ற பொன்னமராவதி மாணவருக்கு அமைச்சர் ரகுபதி பாராட்டு தெரிவித்தார். பொன்னமராவதி திமுக தெற்கு ஒன்றிய மாணவர் அணி அமைப்பாளர் ஷாஸ்தீன் மகன் பார்சில் ரோஷன் சென்ற மாதம் மாநில அளவில் கராத்தே என்ற சூடோவில் மூன்றாம் இடம் வெற்றி பெற்றார், அதற்கு நமது துணை முதல்வரிடம் சென்னையில் பரிசும் பாராட்டும் பெற்று சான்று வாங்கி உள்ளார்.
மீண்டும் இந்த மாதம் மாநில அளவில் அதே விளையாட்டில் மூன்றாம் இடம் வென்றார் இவருடன் இவரது நண்பர்களும் பல விளையாட்டுகளில் வென்றனர். இந்நிலையில் தமிழக இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதியிடம் வாழ்த்து பெற்றனர். மாநில அளவிலான போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு அமைச்சர் ரகுபதி பரிசு வழங்கி பாராட்டினார்.


