கந்தர்வகோட்டை, ஆக.22:புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சியில் தூய்மை பணிகள் மும்முரமாக நடந்தது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் அரசினர் ஆண்கள் மேல்நிலைபள்ளிக்கு செல்லும் மாரியம்மன் கோவில் வீதியில் அதிக அளவில் குப்பைகளும்.
தெருயோர செடிகளும் இருப்பதால் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக ஊராட்சி செயலாளர் ரவிசந்திரனிடம் பொதுமக்கள் தெரிவித்தனர். இதனால் உடனே நடவடிக்கை எடுத்து தூய்மை பணியாளர்களை கொண்டு குப்பைகளை அகற்றி தெருவோர செடிகளை வெட்டி அப்புறபடுத்தபட்டது. இதனை கண்ட பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்தனர்.