பொன்னமராவதி, நவ. 21: பொன்னமராவதி கூட்டுறவு வீடு கட்டும் சங்கத்திற்கு மாவட்டத்தில் சிறந்த சங்கத்திற்கான கேடயத்தை அமைச்சர் ரகுபதி வழங்கினார். புதுக்கோட்டையில் நடைபெற்ற 72 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி கூட்டுறவு வீடு கட்டும் சங்கத்திற்கு சிறந்த சங்கத்திற்கான கேடயத்தை பொறுப்புச் செயலாளர் சின்னையாவிடம் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி வழங்கினார்.
இதில் மாவட்ட கலெக்டர் அருணா, வடக்கு மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன், கந்தர்வகோட்டை எம்எல்ஏ சின்னத்துரை மற்றும் கூட்டுறவு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். சிறந்த சங்கத்திற்கான பரிசு பெற்றதிற்கு சங்க உறுப்பினர்கள், முன்னாள் தலைவர்கள், இயக்குநர்கள், பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் எஸ்ஐஆர் படிவம் வழங்கும் பணியும், பெறக்கூடிய பணியும் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட கோவில்பட்டி, மச்சுவாடி, நரிமேடு உள்ளிட்ட பகுதிகளிலும் இப்பணிகள் நடைபெற்று வருகிறது.


