அறந்தாங்கி, ஆக. 21: அறந்தாங்கியில் அரசு வாகனத்தை மது போதையில் ஓட்டிய டிரைவரால் அடுத்தடுத்து விபத்துக்கள் ஏற்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி கால்நடைதுறைக்கு சொந்தமான ஜீப் டிரைவராக இருப்பவர் அறந்தாங்கியைச் சேர்ந்த கோவிந்தராஜ் (42). இவர், நேற்று அறந்தாங்கி பட்டுகோட்டை சாலையில் உள்ள பெட்ரோல் பங்கு அருகே அலுவலக ஜீப்பை ஓட்டிச் சென்றார். அப்போது, முன்னே சென்ற கார் மீது ஜீப் மோதியது. இதனால், டிரைவர் ஜீப்பை உடனே பின்னால் இயக்கி உள்ளார்.
அப்போது, பட்டுகோட்டையில் இருந்து அறந்தாங்கி சென்ற தனியார் பஸ் மீது மோதியது. மேலும், ஒரு பைக்கிலும் மோதி ஜீப்பை நிறுத்தி உள்ளார். இதையடுத்து, அப்பகுதி பொதுமக்கள் ஜீப் டிரைவரை கீழே இறங்க சொன்ன போது ஜீப் டிரைவர் மது போதையில் இருந்ததுள்ளார். அதையடுத்து, அறந்தாங்கி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, கோவிந்தராஜ்சை போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு வாஙனத்தை மது போதையில் ஓட்டி அடுத்தடுத்து விபத்தை ஏற்படுத்தியதால், அறந்தாங்கியில் பரபரப்பு ஏற்பட்டது.