இலுப்பூர் ,நவ.19: அன்னவாசல் அருகே உள்ள செங்கப்பட்டியில் புகையிலை பொருள்களை விற்ற பெட்டிக்கடைக்காரர் மீது அன்னவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அன்னவாசல் அருகே உள்ள செங்கப்பட்டியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைபொருட்கள் விற்பனை செய்வதாக தகவல் கிடைத்த அன்னவாசல் போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது சொக்கநாதன்(63) என்பவர் நடத்திவந்த பெட்டிக்கடையில் ஆய்வு செய்த அன்னவாசல் போலீசார் கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை பறிமுதல் செய்தனர். பின்னர் சொக்கநாதன் மீது அன்னவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


