அறந்தாங்கி, நவ.19: மணமேல்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் எஸ்ஐஆர் திருத்த பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் அருணா நேரில் ஆய்வு செய்தார். புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் மற்றும் மணமேல்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முறை பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித் தலைவர் அருணா நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முறை பணிகள் துல்லியமாகவும் குறிப்பிட்ட வழிகாட்டு நெறிமுறைகளின் படி நடைபெறுவது குறித்தும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முறை குறித்து பராமரிக்கப்படும் பதிவேடுகள் பெறப்பட்ட ஆவணங்கள் கணினி பதிவேற்றம் உள்ளிட்டவைகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான அருணா நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் வட்டாட்சியர்கள் பாலகிருஷ்ணன் ஆவுடையார்கோவில் பன்னீர்செல்வம் மணமேல்குடி மற்றும் அரசு அலுவலர் உடன் இருந்தனர்.


