பொன்னமராவதி, செப். 19: மூன்று மாவட்டங்களுக்கு இடையேயான கால்பந்து போட்டியில் வெற்றி பெற்று பொன்னமராவதி பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் இளையான்குடியில் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய 3 மாவட்டங்களுக்கு இடையேயான கால்பந்து விளையாட்டு போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் பொன்னமராவதி அருகே உள்ள கேசராபட்டி சி.டி சர்வதேசப் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு, பல சுற்றுகளில் வெற்றி பெற்று இறுதிப்போட்டியில் 2ம் இடம் பெற்று வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்கள். வெள்ளி பதக்கம் வெற்றி பெற்ற மாணவர்களையும் பயிற்சி வழங்கிய உடற்கல்வி ஆசிரியர் பாலமுருகனையும் பள்ளியின் நிறுவனர் சிதம்பரம், தாளாளர் அன்னம்சிதம்பரம், செயல் அலுவலர் சந்திரன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.