பொன்னமராவதி, செப். 19: பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான நான் முதல்வன் திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் பழனியப்பன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். வணிகவியல் துறைத் தலைவர் முகமது இப்ராஹிம், மூசா வங்கி வணிகவியல் துறைத் தலைவர் செந்தில்குமார், இயற்பியல் துறைத் தலைவர் ராமு ஆகிறோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
அற்புதா கலை அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத்துறை பேராசிரியர் இன்னாசிமுத்து தலைமை வகித்து பேசினார். நான் முதல்வன் திட்டத்தின் சிறப்புகளை மாணவர்கள் நன்கு புரிந்து கொள்ளும்படி பிபிடி செய்யப்பட்டது. நான் முதல்வன் திட்ட கல்லூரி ஒருங்கிணைப்பாளர் ஆங்கிலத் துறைப் பேராசிரியர் பாண்டித்துரை நடத்தினார். கணிப்பொறி உதவியாளர் முருகபாண்டி, தமிழ்த்துறை பேராசிரியர் விண்மதி, வங்கி வணிகவியல் துறை பேராசிரியர் கிருஷ்ணவேணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.