இலுப்பூர், செப். 19:அன்னவாசல் ஒன்றிய பகுதிகளில் புல்வயல், வயலோகம், குடுமியான்மலை பகுதியில் உள்ள அடர்ந்த காடுகளில் புள்ளி மான்கள் உள்ளது. மான்கள் அவ்வப்போது இரை தேடியும் வழி தவறி விவசாய பகுதிக்குள் வந்துவிடுகிறது. சாலை விபத்துகளில் சிக்கியும் நாய்கள் கடித்தும் அவ்வப்போது மான்கள் இறக்கின்றன.
இந்நிலையில் நேற்று இலுப்பூர் அருகே உள்ள ஆலத்தூர் குறிச்சிப்பட்டியை சேர்ந்த ஜெயந்த் என்பவருக்கு சொந்தமான தோட்ட பகுதியில் நேற்று சில புள்ளி மான்கள் வழி தவறி இரை தேடி வந்துள்ளது. இதை கண்ட நாய்கள் புள்ளிமானை விரட்டி கடித்தது. இதில் ஒரு மான் படுகாயம் அடைந்து இறந்தது. இதுகுறித்து ஜெயந்த் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் பலியான புள்ளி மானை பரிசோதனை செய்து புதைத்தனர்.