விராலிமலை, நவ. 18: விராலிமலை வாரச்சந்தையில் தக்காளி விலை தொடர்ந்து ஏறுமுகமாக இருப்பது இல்லத்தரசிகளை கவலையடைய செய்துள்ளது. கடந்த வாரத்தைவிட தக்காளி விலை நேற்று கிலோவுக்கு ரூ.25 அதிகரித்துள்ளது. விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களை நேரடியாக விற்பனை செய்யும் வாரச்சந்தையில் இந்த நிலை என்றால் இடைத்தரகர்கள் மூலம் விற்பனையாகும் வெளிச்சந்தையின் நிலையை கேட்க வேண்டியது இல்லை. கார்த்திகை மாதம் நேற்று பிறந்துள்ளதால் சபரிமலை, பழனி சீசன் தொடங்கியுள்ளது. இதனால் அசைவ விற்பனை குறைந்து காய்கறிகள் விற்பனை அதிகரிக்கும் இதனால் விலை உயரக்கூடும் என்ற எதிர்பார்ப்பால் இல்லதரசிகள் கவலையடைந்துள்ளனர்.
நாடு முழுவதும் தக்காளி விலை உயர்ந்துள்ளது. வழக்கமாக ஜூலை, ஆகஸ்ட் மாதத்தில் தக்காளி விலை சற்று உயர்வு வழக்கமான ஒன்று தான் என்ற போதிலும் நிகழாண்டு தக்காளி விலை நவம்பர் மாதத்தில் கிடுகிடுவென உயர்ந்து இல்லத்தரசிகளை அதிரவைத்து வருகிறது. கடந்த மாதத்திற்கு முன்பு ஒரு கிலோ தக்காளி 15-20 ரூபாய் என்ற அளவில் விற்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது தக்காளி விலை கிடு கிடுவென உயர்ந்து கிலோ ரூ, 45-50 ரூபாயை தொட்டுவிட்டது. கடந்த வாரம் திங்கள்கிழமை வாரச்சந்தையில் கிலோ ரூ, 25-30 ரூபாய் அளவில் விற்று வந்த தக்காளி இந்த வாரம் ரூ, 50 தொட்டுவிட்டது. இது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. தக்காளி விலை உயர்வால் உணவகங்கள் பாதிப்புள்ளாக்கும் இந்த விலை உயர்வு பல உணவகங்களில் தக்காளி சட்டினியை நிறுத்தும் அளவுக்கு சென்றுவிடுமோ என்ற கவலை வாடிக்கையாளர்களுக்கு தற்போது எழுந்துள்ளது.
இதனால் சுவை இல்லாத உணவுகளை ருசிக்க வேண்டிய கட்டாய நிலைக்கு வாடிக்கையாளர்கள் தள்ளப்படும் சூழ்நிலை உருவாகும். ஏற்கனவே இதுபோல் தக்காளி விலையேற்றம் கண்ட நிலையில் நுகர்வோர் நிலையை உணர்ந்த தமிழக அரசு தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்காகும் தடையின்றி நுகர்வோர்களுக்கு தக்காளி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வந்தது குறிப்பிடதக்கது. மழை உள்ளிட்ட காரணிகளால் தாக்காளி விலையுடன் மற்ற காய்கறிகள் விலையும் ஏற்றம் கண்டுள்ளது. நகர்வோர்களுக்கு கூடுதல் சுமையாக அமைந்துள்ளது.
விராலிமலை வாரச்சந்தையில் திங்கட்கிழமை விற்பனையான காய்கறி விலை: நாட்டு கத்திரிக்கா 70-80, வெண்டைகாய் 60-70, புடலங்காய் 40-50,உருளைகிழக்கு 40,முட்டைகோஸ் 40,கேரட் 50-60,மாங்காய் 40-50,சிறிய தேங்காய் ஒரு காய் 30-40, முள்ளங்கி 40-50 அவரை 70-80,கொத்தவரங்காய் 60-70,சேனை கிழங்கு 90-100,கருணை 80-90,முருங்காய் ஒன்று 10, எழும்பிச்சை ஒன்று 5-10,வாழைப்ப பூ ஒன்று 20-30, வாழை தண்டு 20-30, வாழைக்காய் ஒன்று 10-20,சாம்பார் வெங்காயம் 50-60, பல்லாரி 50-60, பூண்டு 140-150, இஞ்சி 100-110, பீட்ரூட் 40-50,புதினா கட்டு 30-40, மல்லித்தளை 20-30.


