கந்தர்வகோட்டை, செப்.18: கந்தர்வக்கோட்டை அரசுப்பள்ளி அருகில் பயன்பாடின்றி கிடக்கும் சுகாதார வளாகத்தை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அரண்மனை தெருவில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்து உள்ளது. இப்பள்ளியில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து சுமார் ஆயிரம் மாணவிகள் ஆறாம் வகுப்பு முதல் மேல்நிலை வகுப்பு வரை கல்வி பயின்று வருகின்றனர்.
அரண்மனை தெருவில் சுமார் 200 மக்கள் வசிக்கும் நிலையில் மாணவிகளை அழைத்து வந்துவிட நூற்றுக்கணக்கான பெற்றோர்கள் வந்து செல்கிறார்கள். குடியிருப்பு உள்ள பகுதி என்பதால் இயற்கை உபாதை கழிக்க அருகில் உள்ள சுகாதார வளாகத்தை சீர் செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.