கறம்பக்குடி, அக்.17: கறம்பக்குடி அரசு உதவி பெறும் பள்ளியில் தீயணைப்பு துறை மற்றும் மீட்பு பணிகள் விபத்தில்லா தீபாவளி ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் உள்ள அரசு அனுமதி அரசு உதவி பெறும் டி எல் சி தொடக்கப் பள்ளியில் கறம்பக்குடி தீயணைப்புத்துறை சார்பாக மாவட்ட தீயணைப்பு துறை மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலர் சத்திய கீர்த்தி உத்தரவின்படி டிஎல்சி தொடக்கப்பள்ளி வளாகத்தில் விபத்தில்லா தீபாவளி போலி ஒத்திகை பயிற்சி தீயணைப்பு வீரர்கள் சார்பாக நடைபெற்றது.
கறம்பக்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் பொறுப்பு கருப்பையா தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அனைவரும் விபத்து இல்லாமல் அனைவரும் குறிப்பாக பள்ளி மாணவ மாணவிகள் தீபாவளிவை கொண்டாடுவது பாதுகாப்புடன் எவ்வாறு கொண்டாடுவது பற்றிய செயல்முறைகளை பள்ளி மாணவ மாணவியரிடம் செய்து காண்பித்தனர். பாதுகாப்பாக தீபாவளிக்கு வெடிகளை வெடிப்பது பற்றியும் ஒத்தையில் ஈடுபட்டு செய்து காண்பித்தனர் இந்த போலி ஒத்தியை பயிற்சி முகாமில் கரம்பக்குடி தீயணைப்பு வீரர்கள் மற்றும் அரசு உதவி பெறும் டி எல் சி பள்ளி மாணவ மாணவிகள் ஆசிரியர் ஆசிரியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.