பொன்னமராவதி, அக்17: பொன்னமராவதியில் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி காமராஜ் நகர் டாக்டர் அப்துல்கலாம் மக்கள் நலச்சங்கம் சார்பில் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமின் 94 வது பிறந்த நாளை முன்னிட்டு காமராஜ் நகர் டாக்டர் ஏபிஜெ அப்துல்கலாம் மக்கள் நலச்சங்கத்தின் தலைவர் பிரசன்னா சரவணன் தலைமையில் அப்துல்கலாம் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து இனிப்புகள் வழங்கினர். இதில் அப்துல்கலாம் மக்கள் நலச்சங்கத்தின் செயலாளர் அன்புச்செல்வன்,பொருளாளர் கணேசன்,துணைத்தலைவர் பாண்டியராஜன்,துணைச்செயலாளர் பிரவீன், நிர்வாகிகள் மன்னாரு பாண்டி உட்பட பலர் கலந்துகொண்டனர்.