பொன்னமராவதி, செப்.17: பொன்னமராவதி அருகே தேனிமலை முருகன் கோயில் கிரிவலப்பாதை சாலையினை சீர் செய்து புதிய தார் சாலை அமைக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து, கலெக்டர் அருணாவிடம் அளித்துள்ள கோரிக்கை மனு விவரம்: புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே தேனிமலை முருகன் கோயிலில் மாதந்தோறும் பவுர்ணமி அன்று கிரிவலம் செல்வோர் மற்றும் கோயிலை சுற்றி வழிபாடு செய்யும் பக்தர்களின் வசதிக்காக நீண்ட காலத்திற்கு முன்பு தார்சாலை போடப்பட்டது.
அதன்பின்னர், இந்த சாலை எவ்வித பராமறிப்பு செய்யாமல் நடந்து செல்ல முடியாத அளவிற்கு மோசமாக உள்ளது. தேனி பிள்ளையார் கோயிலில் இருந்து பசுமடம் வரை இந்த சாலை மிகவும் மோகமாக குண்டும் குழியுமாக ஜல்லிகள் பெயர்ந்து கிடக்கின்றது. இந்த சாலையினை புதிதாக தரமான தார்சாலை போடவேண்டும் என பொதுமக்கள், பக்தர்கள் அந்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளனர்,