கறம்பக்குடி, ஆக. 15: கறம்பக்குடி தேர்வுநிலை பேரூராட்சியில் தமிழக அரசின் உத்தரவின்படி போதையை முற்றிலும் தடுக்க வேண்டும், ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் போதை இல்லா தமிழ்நாடு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. கறம்பக்குடி பேரூராட்சி தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் ரமேஷ் முன்னிலை வகித்தார்.இதில் பேரூராட்சி அலுவலர்கள் பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
+
Advertisement