விராலிமலை, ஆக. 15: இந்திய நாட்டின் 79வது சுதந்திர தினம் நாடும் முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று விராலிமலை ஒன்றியத்தில் உள்ள 45 ஊராட்சி மன்றங்களில் சுதந்திர தின கிராமசபை கூட்டம் நடைபெறுகிறது.
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ஆண்டுதோறும் இந்தியக் குடியரசு தினம் (ஜனவரி,26), தொழிலாளர் தினம் (மே,1), இந்திய விடுதலை தினம் (ஆகஸ்டு,15), காந்தி ஜெயந்தி (அக்டோபர்,2), உலக நீர் தினம் (மார்ச், 22) மற்றும் உள்ளாட்சி தினம் (நவம்பர்,1) ஆகிய ஆறு சிறப்பு நாட்களின் போது தமிழ்நாட்டின் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் கூட்டப்படுகிறது.
அந்த வகையில் சுதந்திர தினத்தையொட்டி இன்று விராலிமலை ஒன்றியத்தில் உள்ள 45 ஊராட்சிகளில் உள்ளாட்சி துறை அலுவலர்கள் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்று கோரிக்கைகளை மனுவாக அளித்து பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.