புதுக்கோட்டை, ஆக,14: புதுக்கோட்டை மாநகராட்சி பகுதிகளுக்குள் வாகன ஓட்டிகளுக்கும் பாதசாரிகளுக்கும் இடையூறாக சுற்றித்திரிந்த 58 மாடுகள் பறிமுதல் செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது, புதுக்கோட்டை மாநகராட்சி பகுதிகளில் வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக சாலைகளில் மாடுகள், நாய்கள் உள்ளிட்டவைகளை சுற்றி தெரிகின்றன.
இதனால், பாதசாரிகள் மட்டுமல்லாது பொதுமக்கள் வாகன ஓட்டிகள் ஆகியோர் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால், விபத்துக்கள் அதிகளவில் நடக்கின்றன. இதனை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கையை அடுத்து சாலைகளில் சுற்றித்திரிந்த 58 மாடுகளை மாநகராட்சி அலுவலர்கள் பிடித்து, நகராட்சி பட்டியில் அடைத்து, உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர். இதனால், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் நிம்மதியடைந்தனர்.