Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

விராலிமலை பகுதியில் நாளை மின் நிறுத்தம்.

விராலிமலை, அக் 13: விராலிமலை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப்பணிகள் நாளை அக்.14ம் தேதி நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. விராலிமலை துணை மின்நிலையத்தில் 11 கேவி மின் பாதையில் மின்விநியோகம் பெறும் பகுதிகளான தொழிற்சாலை பகுதிகள்,ராஜளிபட்டி, தேன்கனியூர், நம்பம்பட்டி,பொய்யாமணி,சீத்தப்பட்டி, செவனம்பட்டி, அத்திப்பள்ளம், கொடும்பாளூர் உள்ளிட்ட பகுதிகளில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று விராலிமலை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ஜேம்ஸ் அலெக்சாண்டர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார்