புதுக்கோட்டை, அக்.13: பொம்மாடிமலை அருகே சத்தியமங்கலத்தில் 40 அடி கிணற்றுக்குள் விழுந்த பசு மாட்டை தீயணைப்பு துறையினர் மீட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் பொம்மாடிமலை அருகே சத்தியமங்கலத்தை சேர்ந்தவர் தீத்ததப்பன். விவசாயியான இவரது மாடுகள் வழக்கம் போல் மேய்ச்சலுக்கு சென்றது.
மேச்சலின் போது மாடு அங்கு இருந்த 40 அடி கிணற்றுக்குள் எதிர்பாராதவிதமாக விழுந்துள்ளது. இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த சிப்காட் தீயணைப்புத் துறையினர் கிணற்றில் விழுந்த பசுமாட்டை மீட்டனர். இதனையடுத்து பத்திரமாக மாட்டை உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.