அறந்தாங்கி, நவ.12: அறந்தாங்கி அருகே பிறந்த சில மணி நேரத்தில் குளத்துகரையில் விட்டு சென்ற பெண் குழந்தை மீட்பு. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அமரசிம்மேந்திரபுரம் கிராமத்தில் உள்ள அணைக்கட்டு என்ற குளத்து கரையில் நேற்று காலை 10 மணி அளவில் குழந்தை அழும் சத்தம் கேட்டு உள்ளது.இதையடுத்து அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் சென்று பார்த்த போது பிறந்து சில மணி நேரம் ஆன பெண் குழந்தை அழுது கொண்டு கிடந்து உள்ளது.
குளத்துகரையில் இருந்த குழந்தை அழும் சத்தம் கேட்டு அப்பகுதி பெண்கள் குழந்தைக்கு வாயில் தண்ணீர் வைத்து விட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமணைக்கு தகவல் கொடுத்து உள்ளனர். குளத்துகரையில் விட்டு சென்ற குழந்தை மீட்க சம்பவ இடத்திற்க்கு வந்த அறந்தாங்கி அரசு மருத்துவமணை பணியாளர்கள் குழந்தையை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமணைக்கு பத்திரமாக கொண்டு வந்தனர்.பிறந்து சில மணி நேரம் ஆன பெண் குழந்தை குளத்துகரையில் கிடந்த சம்பவம் அறந்தாங்கியில் பரபரப்பு ஏற்பட்டது.
