கந்தர்வகோட்டை, அக்.12: புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையில் நடைபெற்ற கார் விபத்தில் கல்லூரி உதவி பேராசிரியர் இறந்தார். தஞ்சாவூர் மாவட்டம், பூண்டி விஷ்ணு பேட்டையை சேர்ந்த தட்சிணாமூர்த்தி மகன் சுரேஷ்(42), இவர், கமுதியில் உள்ள முத்துராமலிங்க தேவர் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர், கடந்த வெள்ளிக்கிழமை கல்லூரி முடிந்து, சனி, ஞாயிறு விடுமுறைக்காக தனது காரில் சொந்தஊரான தஞ்சாவூருக்கு சென்றார். அப்போது, கந்தர்வகோட்டை- புதுகை தேசிய நெடுஞ்சாலையில் கந்தர்வகோட்டை அருகில் உள்ள பூண்டிகுளம் அருகே எதிர்பாராத விதமாக நிலை தடுமாறிய கார் சாலை ஓர விளம்பர பலகை இரும்பு கம்பத்தில் மோதி அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. அதில், படுகாயம் அடைந்த கல்லூரி பேராசிரியர் சுரேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து, கந்தர்வக்கோட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
+
Advertisement