கறம்பக்குடி, செப். 12: கறம்பக்குடி ரெகுநாதபுரம் பகுதிகளில் திடீரென மழை வெளுத்து வாங்கியது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ரெகுநாதபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதியில் கடந்த சில மாதங்களாக சுட்டெரிக்கும் வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதன் காரணமாக முதியவர்கள் உடல்நிலை சரியில்லாதவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் வெளியில் செல்வதற்கே அச்சப்பட்டு வந்தனர்.
பள்ளி கல்லூரி நேரங்களில் வெயிலின் வேகம் ரெகுநாதபுரம் பகுதியில் வாட்டி வதைத்தது. இதனை குளிர்விக்கும் வகையில் நேற்று மதியம் 4 மணி முதல் ரெகுநாதபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிளாங்காடு அரித்தோடிப்பட்டி, பாப்பாபட்டி, கல்லுமடை, காடம்பட்டி, புதுவிடுதி மற்றும் பல்வேறு பகுதிகளில் திடீரென இரண்டு மணி நேரத்திற்கு மேலாக மழை வெளுத்து வாங்கியது. எங்கு பார்த்தாலும் மழைநீர் ஆறாக ஓடியது. இதனால் பொதுமக்கள் அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்தனர்.