இலுப்பூர்,செப்டம்பர் 12: இலுப்பூர் அருகே எண்ணை ஊராட்சி வலையப்பட்டியில் நேற்று பெய்த மழையில் மின் கம்பி மீது மரங்கள் வேரொடு விழுந்து 3 மின் கம்பம் கள் சாய்ந்தன. இலுப்பூர் பகுதியில் நேற்று மாலை சுமார் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. இதில் இலுப்பூர் அருகே உள்ள எண்ணை ஊராட்சி வலையப்பட்டி அரசு தொடக்கப்பள்ளி சாலையில் உள்ள மரங்கள் திடீரென உடைந்து மின் கம்பிகளின் மேல் விழுந்தது.
இதனால் அடுத்தடுத்து உள்ள 3 மின் கம்பங்கள் சாய்ந்தன. சாலையில் மரக்கிளைகளுடன் மின் கம்பிகள் கிடந்தன. இதனால் இப்பகுதிகள் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஊராட்சி நிர்வாகம் மற்றும் மின்சாரத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தினர்.