புதுக்கோட்டை, செப்.11: புதுக்கோட்டை மாவட்டம், உதவி இயக்குநர் (தணிக்கை) அவர்களால் பயன்படுத்தப்பட்டு முதிர்ந்த நிலையில் கழிவுநீக்கம் செய்யப்பட்ட நான்கு சக்கர வாகனம் வரும் 26ம் தேதி காலை 10 மணிக்கு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகம் உதவி இயக்குநர் (தணிக்கை) அலுவலகத்தில் பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது. வாகனத்தினை ஏலம் எடுக்க விரும்புவோர் வரும் 22, 23ம் தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை புதுக்கோட்டை ஒன்றிய அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள Mahindra Bolero ஈப்பு: TN 55 G 0379 எண்ணுள்ள வாகனத்தினை நேரில் பார்வையிடலாம்.
மேலும், வாகனத்தினை ஏலம் எடுக்க விருப்புவோர் ஏலம் நடைபெறும் நாளான 26ம் தேதி அன்று காலை 10 மணிக்குள் தங்களது ஆதார் அடையாள அட்டை மற்றும் தனது சொந்த பெயரில் ஜிஎஸ்டி எண்ணுடன் ரூ.2000 முன்பணம் செலுத்தி பெயரை பதிவு செய்து கொள்ளவேண்டும். ஏலத்தொகையுடன் சரக்கு மற்றும் சேவை வரி கட்டணமாக 18 சதவீதம் சேர்த்து முழுத் தொகையையும் உடனடியாக செலுத்திவிட்டு வாகனத்தை பெற்றுக் கொள்ளலாம். மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.