இலுப்பூர், செப். 11: அன்னவாசலில் நேற்று நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழு கூட்டத்திற்கு, ஒன்றிய குழு உறுப்பினர் கணேசன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் செங்கோடன் இன்றைய அரசியல் நிலை குறித்து பேசினார். மாவட்ட பொருளாளர் தர்மராஜன் எதிர்கால கடமைகள் குறித்து பேசினார். அன்னவாசல் ஒன்றிய செயலாளர் மீராமைதீன் வேலை அறிக்கை குறித்து பேசினார்.
ஒன்றிய துணை செயலாளர் ஆனந்த், மாவட்ட குழு உறுப்பினர் ராமன், விவசாயிகள் தொழிற் சங்க ஒன்றிய செயலாளர் சிதம்பரம், ஒன்றிய குழு உறுப்பினர் முருகையா, பழனிச்சாமி, நாகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த கூட்டத்தில் அன்னவாசல் பேரூராட்சி பகுதியில் உள்ள வரத்துவாரி வடிகால்களில் கழிவு நீர்தேங்காமல் சரி செய்ய வேண்டும், தெருநாய்களை அப்புறப்படுத்த வேண்டும், 100 நாள் வேலை திட்டத்தில் நாட்களை குறைக்காமல் திட்டத்தின் நோக்கத்தினை செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.