பொன்னமராவதி, செப். 10: பொன்னமராவதியில் காலி பணியிடங்களை நிரப்ப கோரி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பணியாளர்கள் பொன்னமராவதி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்தனர். கிராம ஊராட்சிகளில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இவர்கள் நேற்று தூய்மை காவலர்கள் அரசாணை எண் 303 நாள் 11.10.2017 ன்படி ஏழாவது ஊதியக் குழு நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும்.
மேல்நிலை நீர் தேக்க தொட்டி பணியாளர்களுக்கான சம்பளத்தை ஒவ்வொரு மாதமும் 5ம் தேதிக்குள் வழங்க வேண்டும், ஒவ்வொரு மாதமும் பணியாளர்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட 115 ரூபாய் பணத்தை கருவூலத்திற்கு வழங்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
நீண்ட காலமாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பணியாளர்களாக பணிபுரிந்து வருபவர்களுக்கு முழு சம்பளம் வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசனிடம் மேல்நிலை நீர்த்தேக்கு தொட்டி இயக்குபவர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் சங்க மாநில துணைத்தலைவர் திரவியராஜ் தலைமையில் கோரிக்கை மனு வழங்கினர்.