கந்தர்வகோட்டை,அக்.9: கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் நெல் நடவு பணி தொடங்க முன் கள பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் உள்ள விவசாயிகள் பயிர் செய்து இருந்த நெல், சோளம் கடலை போன்ற தானிய விளைஞ்சலில் இருந்து மகசூல் பெற்ற நிலையில் தங்களது நிலங்களில் தழை சந்து தர கூடிய இயற்கை செடிகள், தொழு உரம் இட்டு உழவு செய்து வருகிறார்கள். தற்சமயம் வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில் நெல் நாற்றங்காலில் பாவி உள்ள பயிர்களை பறிந்து வயல்களில் நடவு செய்ய டிராக்டர் மூலம் சேறு அடித்து வருகிறார்கள். விவசாயிகள் கூறும்போது, மாடு பூட்டி ஏர் கலப்பையில் சேறு அடித்த காலம் போய் மாடுகள் குறைந்ததால் தற்சமயம் டிராக்டர் மூலம் நிலங்களில் சேறு அடிக்கும் நிலை உள்ளது என்று பழைய நினைவுகளை விவசாயிகள் பகிர்ந்து கொண்டனர்.
+
Advertisement