இலுப்பூர், டிச.8: இலுப்பூரில் நகர திமுக சார்பில் டாக்டர் அம்பேத்கரின் நினைவு நாளை முன்னிட்டு திமுகவினர் அவரது திரு உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.இலுப்பூர் கடைவீதியில் அமைக்கப்பட்டிருந்த அவருடைய திருவருவப்படத்திற்கு அன்னவாசல் மேற்கு ஒன்றிய செயலாளர் பழனியப்பன், இலுப்பூர் நகர செயலாளர் விஜயகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில் மாவட்ட பிரதிநிதிகள் ராஜ் முகமது, கட்சி நிர்வாகிகள், அரசு வழக்கறிஞர்கள் செல்லத்துரை, விஜயகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆரோக்கியசாமி, ரவிச்சந்திரன், ஜீவானந்தம் உட்பட திரளான திமுகவினர் கலந்து கொண்டனர்.


