விராலிமலை,டிச.8: மாத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் நேற்று வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார். விராலிமலை அடுத்துள்ள மாத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை (டிச.9) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
எனவே இங்கிருந்து மின் விநியோகம் பெறும் மாத்தூர் இண்டஸ்ட்ரியல் பகுதி, மாத்தூர் ,பழைய மாத்தூர், கைனாங்கரை, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், ராசிபுரம், குமாரமங்கலம் ,தேவளி, ஆவூர், ஆம்பூர்பட்டி நால்ரோடு, ஆம்பூர்பட்டி, புதுப்பட்டி, செங்களாக்குடி, குளவாய்ப்பட்டி, துறைக்குடி, முள்ளிப்பட்டி, பிடாம்பட்டி , திருமலை சமுத்திரம் மற்றும் வங்காரம்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று மாத்தூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


