இலுப்பூர், அக். 8: அன்னவாசல் அருகே உள்ள கீழக்குறிச்சி ஊராட்சியில் உள்ள வரச்சனாகுளத்தின் பகுதியில் பனை விதைகள் நடப்பட்டது. அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய பகுதியில். மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரையின் படி குளத்தின் கரையில் பனை மரத்தின் விதைகள் நடும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி, அன்னவாசல் அருகே உள்ள வரச்சான்குளத்தின் பகுதியில் 500 பனைவிதைகள் நடப்பட்டன.
குளத்தின் கரைகளில் பனை விதைகளை நடுவதால் மண் அரிப்புகள் தடுக்கப்பட்டு, பனை மரங்கள் நன்கு வளர்ந்து கோடைக்காலங்களில் நீர் பற்றாக்குறையை தவிர்க்க உதவுகின்றன. மேலும் சுற்று சுழல் மற்றும் மண் வளத்தையும் பாதுகாக்கிறது. முதலில் வரச்சனாகுளத்தின் பகுதியில் பனை விதைகள் நடப்பட்ட நிலையில் ஊராட்சி பகுதியில் உள்ள குளத்தின் கரைகளில் பனை விதைகள் நடப்பட்டது. பணிகள் ஊராட்சி செயலாளர் ஆரோக்கியசாமி மேற்பார்வையில் பனை விதைகள் நடப்பட்டன.