பொன்னமராவதி, ஆக. 8: உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு பொன்னமராவதி அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் வலையபட்டி பாப்பாயி ஆச்சி அரசு தாலுகா மருத்துவமனையில் தாய்ப்பால் வார விழா நடந்தது. பொன்னமராவதி ராயல் லயன்ஸ் சங்க தலைவர் முத்தையா தலைமை வகித்தார். மண்டல தலைவர் முருகானந்தம், வட்டாரத் தலைவர் கிரிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தாய்மார்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டிய அவசியம், அதனால் தாய், குழந்தை இருவருக்கும் கிடைக்கும் நன்மைகள் குறித்து விளக்கமாக, விழிப்புணர்வு ஏற்படும் வகையில் தலைமை மருத்துவர் செந்தமிழ் செல்வி பேசினார். கர்ப்பிணி பெண்களுக்கும், குழந்தை பிரசவித்த தாய்மார்களுக்கும் ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய பை வழங்கப்பட்டது.
இதில் சாசன தலைவர் பழனியப்பன், 2ம் துணைத் தலைவர் ரத்தினம், செயலாளர் சுப்பையா, பொருளாளர் சங்கர் நிர்வாகிகள் மணிமுத்து, வெங்கடேசன், பழனியப்பன், சந்திரன் ,ராஜேந்திரன் , பழனியப்பன், கனகசபாபதி, ஆறுமுகம், கமலக்கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.