புதுக்கோட்டை, நவ.7: அரசு சேமிப்பு கிடங்கிற்கு எடுத்துச்செல்ல லாரி இல்லாததால் தேங்கி நிற்கும் 2000 மெ.டன் நெல் மூட்டைகள் கூடுதல் வாகனம் இயக்க வலியுறுத்தியுள்ளனர். திருவாரூர் மாவட்டத்திலிருந்து புதுக்கோட்டை ரயில்வே நிலையத்திற்கு 42 பெட்டிகளில் வந்த 2000 மெட்ரிக் டன் நெல் மூட்டைகளை அரசு சேமிப்பு கிடங்கிற்கு அனுப்பும் பணி நடைபெற்று வரக்கூடிய நிலையில் நெல் மூட்டைகளை ஏற்ற போதிய லாரிகள் இல்லாததால் பணிகள் தொய்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறதுடெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிகள் முடிவடைந்து நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யபட்ட நெல்களை நேற்று திருவாரூர் மாவட்டத்திலிருந்து புதுக்கோட்டை ரயில்வே நிலையத்திற்கு சரக்கு ரயில் மூலம் 42 பெட்டிகளில் 2000 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் வந்திரங்கியது.
இந்நிலையில் அந்த நெல் மூட்டைகளை புதுக்கோட்டை மாவட்டம் கடையாத்துப்பட்டி மற்றும் துளையானுர் பகுதிகளில் உள்ள அரசு சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு செல்லும் பணி நடைபெற்றுவருகிறது. இந் நிலையில் நெல் மூட்டைகளை ஏற்றிச்செல்ல போதிய லாரிகள் இல்லாததால் அந்த பணி தொய்வாக நடைபெற்று வருகிறது. திடீரென்று நெல் மூட்டைகள் வருகிறது என்று கூறியதால் போதிய லாரிகள் இல்லை என்றும் நெல் மூட்டைகளை ஏற்றி சென்று அரசு குடோனில் இறக்கும் லாரிகள் திரும்பி வந்தால் தான் மீதமுள்ள நெல் மூட்டைகளை ஏற்றி செல்ல முடியும் என்று இப்பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
