இலுப்பூர்,நவ.7: அன்னவாசல் பகுதியில் கடந்த வாரத்தில் அதிக மழை பெய்து வந்ததையடுத்து, பரம்பூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனை சார்பில் குடிமியாண்மலை, உருவம்பட்டி, இச்சிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நடமாடும் மருத்துவ குழுவினர் பரம்பூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் பேச்சியம்மாள் தலைமையிலான மருத்துவ குழுவினர் சிசிச்சை அளித்தனர். இதில் கலந்துகொண்டவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து சிகிச்சையளித்து மருந்துகள் வழங்கினர். மேலும் பெண்கள், குழைந்தைகளுக்கு காய்சல் உள்ளதா எனவும் பரிசோதனை செய்தனர்.
+
Advertisement
