கந்தர்வகோட்டை, நவ.6: கந்தர்வகோட்டையில் இருந்து புதுக்கோட்டைக்கு சீருடை பணியாளர் தேர்வாளர்களுக்கு சிறப்பு பேருந்து இயக்க கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தை சார்ந்த மட்டாங்கால், சிவந்தான்பட்டி, வேம்பன்பட்டி, கல்லாக்கோட்டை, காட்டு நாவல்,துலுக்கன்பட்டி, சுந்தம்பட்டி, நெப்புகை, வேலாடிப்பட்டி, பழைய கந்தர்வகோட்டை, மெய்குடிப்பட்டி, புதுநகர், கொத்தகம், வடுகப்பட்டி, கோமாபுரம் மற்றும் வளவம்பட்டி,ஆதனக்கோட்டை போன்ற கிராமபுரத்தில் உள்ள படிந்த இளைஞர்களும், பெண்களும் தமிழ்நாடுஅரசு சீருடை பணியாளர்களுக்கான தேர்வு வாரியம் நடத்தும் தேர்வினை வரும் 9ம் தேதி ஞாயிற்றுகிழமை எழுத உள்ளனர்.
இந்த நிலையில் இவர்கள் புதுக்கோட்டை, தஞ்சாவூர் போன்ற அருகில் உள்ள நகர்புற பள்ளி கல்லூரிகளில் தேர்வு மையம் அறிவித்து உள்ளனர். எனவே தேர்வு நாளன்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கந்தர்வகோட்டையில் இருந்து தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டைக்கு சிறப்பு பேருந்து இயக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறார்கள்.
