புதுக்கோட்டை, ஆக.6: புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் சார்பில் மொபைல் செயலி மூலம் திமுகவில் இணைய வைத்து இணைந்தவர்களின் வீடுகளில் ஓரணியில் தமிழ்நாடு என்ற ஸ்டிக்கரையும் ஒட்டி அவர்களுக்கு ஓரணியில் தமிழ்நாடு அட்டையையும் வழங்கினார். இதி, திமுகவைச் சேர்ந்த பலரும் கலந்துகொண்டு ஓரணியில் தமிழ்நாடு என்ற முழக்கத்தையும் எழுப்பினர்.
இந்நிலையில் புதுக்கோட்டை தெற்கு மாநகரம் 6வது வட்ட கழகத்தில் வட்ட கழகம் பகுதியில் தெற்கு மாநகர பொறுப்பாளர் ராஜேஷ் ‘ஓரணியில் தமிழ்நாடு’ முன்னெடுப்பின் கீழ் உறுப்பினர் சேர்க்கை பணியை தொடங்கி வைத்தார். இதில், பாக முகவர்களும், பூத் டிஜிட்டல் ஏஜேண்ட்கள்,இளைஞரணி, மகளிரணி மற்றும் பாகநிலை உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் இணைந்து செயல்பட்டனர்.