பொன்னமராவதி, நவ. 5: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள அம்மன்குறிச்சியில் திமுக வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. பொன்னமராவதி தெற்கு ஒன்றியச்செயலாளர் அடைக்கலமணி தலைமை வகித்து என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்பது குறித்தும் நேற்று முதல் நடைபெற்று வரும் எஸ்ஐஆர் வாக்காளர் சிறப்பு திட்ட முகாமில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் ஆற்றவேண்டிய பணிகள் குறித்து விளக்கி பேசினார். இதில் மாவட்ட பிரதிநிதி பாலு, இளைஞரணி கதிரேசன், தகவல் தொழில்நுட்ப அணி அரவிந்த் மற்றும் 41,42 வாக்குச்சாவடி முகவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
+
Advertisement
