கறம்பக்குடி, நவ. 5: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ரெகுநாதபுரம் அருகே கீராத்தூர் கிராம பகுதியில் நேற்று காலை 7 மணி அளவில் கல்லணை கிளை வாய்க்கால் வாய்க்காலில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக கறம்பக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு வந்தது.
தகவலை அடுத்து தீயணைப்பு நிலைய அலுவலர் பொறுப்பு கருப்பையா தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்டு ரெகுநாதபுரம் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். ஏதேனும் மர்மமான முறையில் இறந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
