கறம்பக்குடி, அக். 4: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே திருமணஞ்சேரி மயிலாடி தெருவை சேர்த்தவர் காளிமுத்து. இவர் மது பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். இவர் நேற்று முன்தினம் வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்து மயங்கி கிடந்துள்ளார்.
உடனடியாக அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி காளிமுத்து இறந்து விட்டார். இது குறித்து அவரது உறவினர் வேம்பாயி கொடுத்த புகாரின் பேரில் கறம்பக்குடி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.