பொன்னமராவதி, நவ1: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகாவில் பொன்னமராவதி,காரையூர், அரசமலை பிர்காகளில் சமீபத்தில் பெய்த மழையினை பயன்படுத்தியும் கிணற்று பாசனம், போர்வெல் அமைத்து அதன் மூலம் பாசனம் என 1400ஹெக்டேர் பரப்பில் நெல் நடவு செய்யப்பட்டு நெற்பயிர்களை தாக்கும் பூச்சிகளை அழிப்பதற்காக மருந்து அடிக்கும் பணி நடைபெற்றுவருகின்றது.
நடவு செய்யப்பட்டுள்ள நெல் பயிருக்கு களை எடுக்கம் பணி நடைபெற்று வருகின்றது. கொஞ்சம் பெரிய பயிர் ஆன வயல்களில் பூச்சி தாக்குதல் ஆரம்பித்து விட்டது. இதனையடுத்து நெல்வயலில் பூச்சிகளை அழிக்கும் விதமாக மருந்து அடிக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது. மழையினை நம்பி நடவு செய்த விவசாயிகள் அடுத்து மழை எப்போ பெய்யும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.
