இலுப்பூர், செப். 30: அன்னவாசல் அருகே சித்தன்னவாசல் சாலை ஓரத்தில் உள்ள மைல்கல்லுக்கு நெடுஞ்சாலை துறையினர் பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர். அன்னவாசல் நெடுஞ்சாலை துறை பணியாளர்கள், ஆயுதபூஜையை முன்னிட்டு சாலை ஓரத்தில் உள்ள மைல் கற்களை சுற்றியுள்ள பகுதிகளையும் சுத்தம் செய்து வாழை கன்றுகள் மற்றும் தேரணங்கள் கட்டி பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர். இந்நிகழ்வில், உதவி பொறியாளர் இளவரசி, சாலை ஆய்வாளர் அமுதா உள்ளிட்ட சாலை பணியாளர்கள் கலந்து கொண்டனர். பின்னர், வழியில் சென்றவர்களுக்கு பிரசாதம் வழங்கினர்.
+
Advertisement