அறந்தாங்கி, 29:மணமேல்குடி ஒன்றியத்தில் புதிய பாரத திட்ட கற்றல் மையங்களுக்கு எழுது பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் தன்னார்வலர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வழிகாட்டுதலின்படி மணமேல்குடி ஒன்றியத்தில் புதிய பாரத திட்ட கற்றல் மையங்களுக்கு எழுது பொருட்களை மணமேல்குடி வட்டார வள மைய மேற்பார்வையாளர் பொறுப்பு சிவயோகம் தலைமையில் வழங்கப்பட்டது.
ஆசிரியர் பயிற்றுநர்கள் சசிகுமார், பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில்
24 கற்றல் மையங்களுக்கு சிலேட்டு , சிலேட்டு எழுதுப் பொருட்கள் மற்றும் பட சார்ட் போன்ற பொருட்கள் மையங்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் 24 மையங்களின் தன்னார்வலர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு எழுதுபொருட்களை பெற்றனர்.
