புதுக்கோட்டை, அக்.25: புதுக்கோட்டையில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் மாவட்டம் முழுவதிலும் காவல்துறையினுடன் இணைந்து பணியாற்ற ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு நேற்று நடைபெற்றது.புதுக்கோட்டை மாவட்ட முழுவதும் காவல்துறையினருடன் இணைந்து பணியாற்ற ஊர்க்காவல் படை ஆட்கள் தேர்வு புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் நேற்று நடைபெற்றது. ஊர்க்காவல் படையில் ஆண்கள் 57 பேரும் பெண்கள் 10 பேரும் என மொத்தம் 67 பேருக்கான தேர்வு நடைபெற்றது. புதுக்கோட்டை காவல்துறை கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா உத்தரவின் பேரில் 67 ஊர்க்காவல் படையினரை தேர்வு செய்ய நடைபெற்ற தேர்வில் 250க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த ஊர் காவல் படையினர் தேர்வில் பெண்களுக்கு 400 மீட்டர் ஆண்களுக்கு 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத் தேர்வு மார்பளவு உயரம் உள்ளிட்டவைகள் சரிபார்க்கப்பட்டு தேர்வுகள் நடைபெற்றது. இந்த தேர்வில் கலந்து கொண்ட பெண்கள் ஓட்டப்பந்தயத் தேர்வில் கலந்து கொண்டு ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டு ஓடிச் சென்ற நிலையில் பெண்கள் ஒரு சிலர் மயங்கி கீழே விழுந்தது ஊறுகால் படை தேர்வில் கலந்து கொண்டவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் மயங்கி விழுந்தவர்களுக்கு காவலர்கள் தூக்கிச் சென்று முதலுதவி அளித்தனர்.
