கந்தர்வகோட்டை, அக்.25: வடகிழக்குப் பருவமழை தொடர்ந்து பெய்துவருவதால், புதுக்கோட்டை மாவட்டம் வடுகப்பட்டி சாலையோரமிருந்த புளியமரம் வேறுடன் சாய்ந்தது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் முழுவதும் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதனால், பூமி குளிர்ந்து, நிலத்தடி நீர்மட்டமும் உயரத்துவங்கியுள்ளது. இந்நிலையில், நேற்று காற்று மழை பெய்ததால், கந்தர்வகோட்டை- செங்கிப்பட்டி சாலையில் உள்ள வடுகப்பட்டி ஊராட்சியில் சாலையோரத்தில் உள்ள புளியமரம் வேருடன் சாய்ந்தது. இதில், அதிஷ்டவசமாக அருகில் உள்ள வீட்டில் மேல் விழாததால், சேதம் தவிர்க்கப்பட்டது. இதேபோல், மரம் சாய்வதைத் தடுக்க நெடுச்சாலை ஒரமுள்ள மரங்களின் கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தவும், பலவீனமான மரங்களை அகற்றவும் விபத்தை தவிர்க்கலாம். எனவே, நெடுஞ்சாலை, வருவாய்த்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
+
Advertisement
